உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டுப்புற கலைஞர்கள் செயற்குழு கூட்டம் 

நாட்டுப்புற கலைஞர்கள் செயற்குழு கூட்டம் 

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில துணை செயலர் முருகவேல் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலர் கார்த்திக், துணை செயலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மேற்கு மாவட்ட தலைவராக முனுசாமி, செயலராக சின்னசாமி, பொருளாளராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், புதிய பொறுப்பாளர்கள் ஆலோசனைபடி சங்கத்தை வழிநடத்த வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும். மாவட்டத்தின் சார்பில் மாநில மாநாடு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரோன் ராஜ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ