மேலும் செய்திகள்
30 யூனிட் ரத்தம் சேகரிப்பு
09-Dec-2024
விழிப்புணர்வு ஊர்வலம்
07-Dec-2024
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஸ்ரீமுஷ்ணம் லயன்ஸ் கிளப், நாளா கிளப், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீமுருக விலாஸ் ஜூவல்லரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் நிஷாந்த், நாளா கிளப் தலைவர் தனரேகா ஆகியோர் தலைமை தாங்கினார்.பள்ளி தாளாளர் செங்கோல், சி.எஸ்.கல்வி நிறுவனங்கள் நிர்வாகி அபிராமி, ஸ்ரீமுருகவிலாஸ் உரிமையாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். இரண்டாம் துணை நிலை ஆளுநர் சாலை கனகதாரன்,வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். கோவை சங்கரா கண்மருத்துவமனை டாக்டர் மஷ்ரூபா தலைமையில் 13 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். பள்ளி முதல்வர் புனிதவள்ளி, தொழிலதிபர் வாசுராஜேந்திரன், லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் கள் சண்முகம், பூவராகமூர்த்தி, ஜெயவேல்,- ஜவகர் நாராயணசாமி,வேல்முருகன், ரவிசுந்தர், பொருளாளர் அருள்மொழி, ஒருங் கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். முகாமில் 250 பேர் கலந்துக் கொண்டதில் 75 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
09-Dec-2024
07-Dec-2024