மேலும் செய்திகள்
தடகளப்போட்டியில் மாற்றுத்திறன் மாணவர் வெற்றி
10-Oct-2024
சிதம்பரம் : சிதம்பரத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.குமராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த கல்வி சார்பில், சி.கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில்,வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், குமார், கோமதி தலைமை தாங்கினர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,பள்ளி தலைமை ஆசிரியர் பவானி முன்னிலை வகித்தனர் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் வரவேற்றார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர்.குமராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், தகுதியுள்ளமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் நெப்போலியன், காமாட்சி, மல்லிகா, கதிரொளி ஜெயஸ்ரீ,பூங்குழலி, சிறப்பு ஆசிரியர்கள் நிருபமா, புவனேஸ்வரி, கலைமதி, ஸ்டாலின், திலகவதி, கவிதா, இயன் முறை மருத்துவர் ஆதித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
10-Oct-2024