உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் அசத்தல்

அரசு பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் அசத்தல்

நடுவீரப்பட்டு : கடலுாரில் கடந்த மாதம் நடந்த வட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற வி.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,19 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றனர். இதன் மூலம், அவர்கள் வரும் 28ம் தேதி நெய்வேலியில் நடக்கும் மாவட்ட வருவாய் அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் சுதர்சன், கனகசபை ஆகிய இருவர், முதல்வர் கோப்பைக்கான கடலுார் மாவட்ட கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் விளையாட சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பள்ளியில் விளையாட்டு திடல் இல்லாத போதும் மாணவர்கள் தங்களது கிராம பகுதியில் தினமும் விளையாடி,கபடி பயிற்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். சாதனை மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார் ஆகியோரை, தலைமை ஆசிரியர் வடிவேல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காசிலிங்கம், ஊராட்சி தலைவர் சதாசிவம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி