உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலுார்: கடலுார் போக்குவரத்து போலீஸ் மற்றும் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கடலுார் டவுன்ஹால் அருகில் நடந்த பேரணியை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் புதுநகர் இளவரசி, திருப்பாதிரிப்புலியூர் கதிரவன், பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மற்றும் ஏ.பி.வி.ஆர்., ேஹாண்டா ஷோரூம் நிறுவனத்தினர் பங்கேற்றனர். போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படையினர், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி பாரதி சாலை, இம்பீரியல் சாலை, ஜவான்ஸ்பவன்–கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, செம்மண்டலம் வழியாக சென்று மீண்டும் டவுன்ஹால் எதிரில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ