ஹாக்கி போட்டி பரிசளிப்பு
கடலுார்; கடலுார் ஹாக்கி அகாடமி சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சண்முகசாமி நினைவு கோப்பை ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மற்றும் ஹாக்கி அகாடமி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கருணாகரன் வரவேற்றார். அரிஸ்டோ கல்விக்குழும நிறுவனர் சொக்கலிங்கம் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரவீன் அய்யப்பன் பேசினார். பர்ஸ்ட் வேர்டு கம்யூனிட்டி நிறுவன தலைவர் அசோக்குமார், புதுச்சேரி கேட்டர்மேன் பிருவிங் நிறுவனம் ரங்கராஜு, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களை கவுரவப்படுத்தினர். கூட்டுறவு சார்பதிவாளர் பாலகிருஷ்ணன், அகாடமி துணைத்தலைவர் அசோகன், நிர்வாகிகள் ராஜ்மோகன், லோகேஸ்வரன், வழக்கறிஞர் ஜெயபால், நிர்மல்குமார் ஜெயின், ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற பயிற்சியாளர்கள் போஸ், மனோகரன் மற்றும் மணிமாறன் பங்கேற்றனர்.