உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிப்படை பிரச்னைகளை சரி செய்வேன்: ராமதாஸ் அணி ஞானசுந்தரி உறுதி 

அடிப்படை பிரச்னைகளை சரி செய்வேன்: ராமதாஸ் அணி ஞானசுந்தரி உறுதி 

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக கட்சி (பா.ம.க., ராமதாஸ்) அணி வேட்பாளர் ஞானசுந்தரி, காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் விருத்தாசலம் தொகுதியில் உள்ள பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களை சந்திந்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று, இளமங்கலம், ஆலிச்சிக்குடி, கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம் நகரம், புதுக்கூரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பொதுமக்களிடம் பேசுகையில், 'மாவட்டத்தில் பின் தங்கியுள்ள விருத்தாசலம் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன். மக்களின் அடிப்படை பிரச்னைகளை விரைந்து சரிசெய்வேன்,' எனக்கூறி, பொதுமக்களிடம் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, ஒன்றிய செயலர்கள் சக்திவேல், ஜானகிராமன், நகர செயலர் தமிழ்செல்வன், நகர வன்னியர் சங்க தலைவர் சேதுபதி, விருத்தாசலம் தொகுதி அமைப்பு செயலர் மாநில பசுமை தாயக துணை செயலர் சசிக்குமார், ஒன்றிய இளைஞரணி கவியரசன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !