உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீனஸ் பள்ளியில் புதுமை விழா

வீனஸ் பள்ளியில் புதுமை விழா

சிதம்பரம்; சிதம்பரம் வீனஸ் பள்ளியில் புதுமை விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் வீனஸ் குமார் தலைமை தலைமை தாங்கினார். துணை தாளாளர் ரூபியாள்ராணி, முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ்போனிகலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், குமார், கோமதி ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில் மாணவர்கள் சார்பில், புதுமையான மற்றும் பாரம்பரிய உணவு வகைகள், அறிவியல் தொழில்நுட்பம், அயல்நாட்டு வாழ்க்கை முறை, பண்பாடுகள், நாணயங்களின் வகைகள், பண்டைய கால உணவு நடைமுறைகள், பெற்றோர்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டுகள் போன்றவை விழாவில் படைப்புகளாக, காட்சிபடுத்தியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ