கற்பித்தல் பணியில் புதுமை ரத்தனா பள்ளி அசத்தல்
பண்ருட்டி லட்சுமிபதி நகரில் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 2009ம் ஆண்டு மாயகிருஷ்ணன் என்பவரால் துவங்கப்பட்டது. கல்வி ஒன்று தான் படைப்பாற்றல், சிந்தனையை வளர்க்கும் என டாக்டர் அப்துல்கலாம் கூறியது போல் கல்வி பணிக்காக இப்பள்ளி துவங்கப்பட்டது. தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி, பள்ளி இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனைப்படி பள்ளி சிறப்பாக செயல்படுகிறது. 2009ல் 220 மாணவர்கள் படித்த நிலையில், அடுத்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. கடந்த 2014ல் மாணவர்கள் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்தது. கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கற்பித்தல் பணியில் புதுமைகளை கொண்டு வருகிறது. கடந்த 2014ல் பண்ருட்டி நகரில் முதல் முறையாக டிஜிட்டல் வகுப்பறைகள் அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவால் துவக்கி வைக்கப்பட்டது. மாநில, மாவட்ட, குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மல்லர்கம்பம், சிலம்பம் ,யோகா, கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகதரம் வாய்ந்த உள்விளையாட்டரங்கத்தில் இறகுபந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வித்தரத்துடன் லீட்ஸ்கூல் அகாடமியுடன் இணைந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் நவீன தொழில்நுட்பத்துடன் பாடம் கற்பிக்கப்படுகிறது. காற்றோட்டமான வகுப்பறைகள், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் என அடிப்படை வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. விஜயதசமி முன்னிட்டு எல்.கே.ஜி.முதல் பிளஸ் 1 வரை சேர்க்கை நடக்கிறது.