இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கடலுார்: கடலுார் புதுநகர்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குருமூர்த்தி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு புதுநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.