உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர் மாநில அளவில் சிறப்பிடம்

ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர் மாநில அளவில் சிறப்பிடம்

மந்தாரக்குப்பம் : ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழும மாணவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தார்.ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் தொழுதுார் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் ஷகிர் அஹ்மது 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர், தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண், ஆங்கிலம் 100, கணிதம் 99, அறிவியல் 100 , சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.மாணவர் அபிலாஷ் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், பாத்திமா மற்றும் விகாஷினி 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தமிழ் பாடத்தில் 10க்கு மேற்பட்டோர் 99 மதிப்பெண், 37 க்கும் மேற்பட்டோர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவருக்கும், கோபாலபுரம், திருப்பயர், தொழுதுார், வடக்குத்து, வடலுார் உள்ளிட்ட ஜெயப்பிரியா கல்வி குழும பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா விருத்தாசலம் ஜெயப்பிரியா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.ஜெயப்பிரியா கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர், சாதனை மாணவர்களுக்கு விருதுகள், பண மாலை பரிசு வழங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர்கள் சுதர்சனா, கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி சிதம்பரி, ரேவதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை