ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளிகள் பொதுத்தேர்வில் சாதனை
மந்தாரக்குப்பம்: ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கோபாலபுரம்
ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், அர்ச்சனா 574 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கிருத்திகா 573 மதிப்பெண் மூன்றாமிடம் பிடித்தனர். திருப்பயர்
ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன் 584 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், மிதுன்ராஜ் 583 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கவிப்பிரியா மற்றும் ரேவதி ஆகியோர் தலா 576 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தொழுதுார்
கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஷிபா பிரவீன் 581 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ஷிகாஸ் ஹுசைன் 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பிரதிக்ஷா 577 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். நெய்வேலி வடக்குத்து
ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் குமார் 566 மதிப்பெண் பெற்று முதலிடம், கிருபானந்தன் 565 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கிஷோர் மற்றும் சிவதாஸ் ஆகியோர் தலா 560 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 550க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் பாடங்களில் 72க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளியில் நடந்த விழாவில், சாதனை மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் ஜெயப்பிரியா வித்யாலாயா கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர், பள்ளி இயக்குநர் தினேஷ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.வடக்குத்து ஜெயப்பிரியா மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி செயலாளர் சிந்து, கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி முதல்வர் சுதர்சனா, திருப்பயர் பள்ளி முதல்வர் ரேவதி, கிரீன் பார்க் பள்ளி முதல்வர் கார்த்திகேயன், வடக்குத்து பள்ளி முதல்வர் சிதம்பரி, முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம் உடனிருந்தனர்.