உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

கடலுார்; கடலுார் புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்து வருகின்றன. கடலுார் புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதிக்குப்பின் தீபாராதனை நடந்தது. இன்று (4ம் தேதி) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, துவார பூஜை, சூர்ய பூஜை, அக்னி கார்யம், பக்ஷணங்கள் ஹோமம், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, சுமங்கலி பூஜை, மூல மந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை 5:30மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தேவி மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடாகி 10:30மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ