மேலும் செய்திகள்
சிதம்பரம் கோர்ட்டில் பைக் திருடியவர் கைது
21-Dec-2024
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, லால்புரம் ஊராட்சி மக்கள், சிதம்பரம் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.சிதம்பரம் நகராட்சியுடன் சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பல கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில், சிதம்பரம் அடுத்துள்ள லால்புரம் ஊராட்சி சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட மேலசொக்கநாதன் பேட்டை, பாலுத்தாங்கரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், சமூக ஆர்வலர் முனிசங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் நடனம் மயிலோன் தலைமையில் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் மனு அளித்தனர்.மனுவில், லால்புரம் ஊராட்சி, மேலசொக்கநாதன்பேட்டை, பாலுத்தாங்கரை கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மிகவும் பின்தங்கிய மக்களாகிய இவர்கள், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் இக்கிராம மக்கள், தேசிய ஊரக வேலை உறுதிச்திட்டம் வேலை வாய்ப்புகளை நம்பி வாழ்கிறோம். எனவே, எங்கள் கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
21-Dec-2024