உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வழக்கறிஞர்கள் போராட்டம்

 வழக்கறிஞர்கள் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் டி.எஸ்.பி.,யை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், அட்வகேட்ஸ் அசோசியேஷன் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குபேரமணி, பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அதில், விருத்தாசலம் வழக்கறிஞர் சிவசங்கரிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனை வழக்கறிஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வரும் 2ம் தேதி மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து புகார் தெரிவிப்பது, 3ம் தேதி பாலக்கரை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் மற்றும், 4ம் தேதி டி.எஸ்.பி., அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவது, அதுவரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து காலை, 11:30 மணியளவில், நீதிமன்றம் முன் டி.எஸ்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் குமாரசாமி, ராஜேந்திரன், அய்யாசாமி, செல்வபாரதி, ஸ்ரீநிவாசன், விஜயகுமார், ஆனந்தகண்ணன், புஷ்பதேவன், காசிவிசுவநாதன், சிவக்குமார், கணேஷ், மணிகண்டராஜன், இளையராஜா, அப்துல்லா, சுரேஷ்குமார், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை