உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மதுபாட்டில்கள் பறிமுதல் 

 மதுபாட்டில்கள் பறிமுதல் 

கடலுார்: கடலுார் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 48 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டசபை தேர்தலையொட்டி புதுச்சேரியிலிருந்து கடலுாருக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று கடலுார் அடுத்த புதுக்கடை பைபாஸ் அருகே ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த நபரை போலீசார் நிறுத்த முற்பட்ட போது, அவர் வைத்திருந்த மதுபாட்டில்களை போட்டு கீழே விட்டு தப்பியோடினார். உடன், போலீசார் 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து. தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை