தவறவிட்ட தங்க நகை பெண்ணிடம் ஒப்படைப்பு
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பெண் தவறவிட்ட மூன்றரை சவரன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.சென்னை மதுராந்தகத்தை சேர்ந்தவர் எட்வின் ராஜா மனைவி ஜீவிதா. இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்து, காலை 10:00 மணியளவில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.அப்போது, அவரது கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் நகையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடினார். அப்போது, கோவில் வளாகத்திற்கு முன் உள்ள தனியார் ேஹாட்டர் உரிமையாளர் பாபு என்பவரது கையில் அந்த நகை கிடைத்தது.உடன் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் முன்னிலையில், ஜீவிதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.நகையை உரியவரிடம் ஒப்படைத்த ேஹாட்டல் உரிமையாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.