உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற ஒருவர் கைது

குட்கா விற்ற ஒருவர் கைது

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அறந்தாங்கியில் பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சோழத்தரம் போலீசார் நேற்று முன்தினம் அறந்தாங்கி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.அதையடுத்து, கடை உரிமையாளர் அறந்தாங்கி கிழக்கு தெருவைச் சேர்ந்த ஜான்போஸ்கோ, 48; என்பவரை கைது செய்து, சோழத்தரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !