உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவரை கத்தியால் குத்தியவர் கைது

 மாணவரை கத்தியால் குத்தியவர் கைது

பண்ருட்டி: கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தியவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்,43; இவரது மகன் ரியாஸ்,19; இவர், கடலுார் அரசு கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், மேல்கவரப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சுதர்சன்,23; என்பவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 9ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், ரியாசை கத்தியால் சுதர்சன் தாக்கினார். இதில் காயமடைந்த ரியாஸ் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து சுதர்சனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை