உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மொபட் திருடிய நபர் கைது

 மொபட் திருடிய நபர் கைது

கடலுார்: அரசு மருத்துவமனையில் நிறுத்தியிருந்த மொபட்டை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த கோண்டூர் வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் பிரபாகரன்,60; இவர் கடந்த 23ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரை பார்ப்பதற்காக தனது மொபட்டில் வந்தார். நண்பரை பார்த்துவிட்டு வந்தபோது அவரது மொபட்டை காணவில்லை. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், மொபட்டை திருடிச்சென்றது புதுச்சேரி காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த டைட்டஸ் எபினேசன், 55, என்பதைக் கண்டறிந்த போலீசார், நேற்று அவரைக் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !