காதலியை மிரட்டிய காதலன் மீது வழக்கு
கடலுார்: பேசுவதை தவிர்த்த காதலியை மிரட்டிய காதலன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் வசந்தகுமார்,20; இவரும், கடலுார் பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லுாரி மாணவியும் முகநுால் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 10 மாதமாக காதலித்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வசந்தகுமாரிடம், மாணவி பேசவில்லை. அதில், ஆத்திரமடைந்த வசந்தகுமார், மாணவி வீட்டின் அருகில் சென்று ஏன் பேசவில்லை எனக் கேட்டு மிரட்டினார். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, வசந்தகுமாரை தேடிவருகின்றனர்.