உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மது போதையில் தீ வைத்து கொண்டவர் சாவு 

 மது போதையில் தீ வைத்து கொண்டவர் சாவு 

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மது போதையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை ஆசாரி தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ், 30; இவரது மனைவி அமலா; 28; தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சரண்ராஜ் அடிக்கடி குடித்து விட்டு,வீட்டிற்கு வந்து மதுபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போ வதாக மிரட்டி வந்தார். இந்நிலையில், கடந்த 1 ம் தேதி சரண்ராஜ் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீபிடித்தது. ஆபத்தான நி லையில் இருந்தவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை