உள்ளூர் செய்திகள்

 திருமணம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பன்னீர்செல்வம், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய உத்தரப்படி, இரவு 10:00 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் எனும் பரபரப்பில் இருந்தனர். அப்போது, நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த மணமகன் சங்கர் என்பவர், மணப்பெண்ணுடன் திடீரென மேடையேறி, 'தங்கள் முன்னிலையில் தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும்' என, திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து, திருமாவளவன் தாலி எடுத்து கொடுத்து, அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி