இறைச்சி கடைகள் மூடல்
மந்தாரக்குப்பம்: வடலுார் தைப்பூசத்தையொட்டி இறைச்சி கடைகளை மூட கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வடலுார் சத்தியஞான சபையில், 155 வது தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை மூடி வைக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி, மற்றும் மீன் ஆகிய இறைச்சிகளை விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ் ரத்து செய்யப்படும். நகராட்சிகள் நிர்வாக சட்ட விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.