மேலும் செய்திகள்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்
05-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு அமைச்சர் கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்தசாமி, வேல்முருகன் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் வரவேற்றார். அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர துணை செயலாளர் ராமு, ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், இளைஞரணி அமைப்பாளர்கள் பொன்கணேஷ், வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பழனிசாமி, நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞரணி அருள்குமார், அறிவுடைநம்பி, வி.சி., மாவட்ட செயலாளர் திராவிடமணி, கவுன்சிலர் அன்பழகன் உடனிருந்தனர்.
05-Jul-2025