ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு
கடலுார்: கடலுார் ரேஷன் கடையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு செய்தார்.வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலுார் சட்டசபை தொகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதன் ஒரு பகுதியாக கடலுார், தேவனாம்பட்டிணம் ரேஷன் கடையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ரேஷன் பொருட்களை போதிய அளவிற்கு இருப்பு வைத்து, பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் எனவும், பொருட்களை மழைநீரில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் எனவும்,அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். கவுன்சிலர் மகேஸ்வரி விஜயகுமார் உடனிருந்தார்.