உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணித பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி

கணித பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 10 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கணிதம் பாடத்தில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு அரசு பொதத்தேர்வு பொதுத்தேர்வில் கடலுார் மாவட்டம், 94.22 சதவீதம் தேர்ச்சியுடன் மாநில அளவில் 21ம் இடத்தை பிடித்தது. மாவட்டத்திலிருந்து தேர்வெழுதிய 32ஆயிரத்து 600 மாணவர்களில், 30ஆயிரத்து 717 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆயிரத்து 883 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கணித பாடத்தில், 939 மாணவர்களும், அடுத்ததாக மொழிப்பாடத்தில் 555 பேரும், சமூகஅறிவியல் பாடத்தில் 545 பேரும், ஆங்கில பாடத்தில் 409 பேரும், அறிவியல் பாடத்தில் 192 பேரும், விருப்ப பாடத்தில் 4 பேரும் பெயில் ஆகினர். அரசுப்பள்ளிகளில் தேர்வெழுதிய 15,906 பேரில், கணிதம் 532, மொழிப்பாடம் 332, சமூகஅறிவியல் 279, ஆங்கிலம் 257, அறிவியல் 115 பேர் தோல்வி அடைந்தனர். அதுபோல தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களை பெறவில்லை. கணிதம் பாடத்தில் 152 பேரும், அறிவியல் பாடத்தில் 129 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 43 பேரும், 100 மதிப்பெண்களை பெற்றனர். கடந்த ஆண்டில் 1983 நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெறப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 324 நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களே எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை