இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
வேப்பூர் : கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்; பிளம்பர். இவரது மனைவி நித்யா, 24. திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. அனிஷ், 5, கோபிகா, 2, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நித்யா, குழந்தைகளுடன் அப்பகுதி கிணற்றில் குதித்தார். இதில், நித்யா, அனிஷ், கோபிகா மூவரும் இறந்தனர். வேப்பூர் போலீசார் உடல்களை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.