உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் கூட்டுரோட்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

வேப்பூர் கூட்டுரோட்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

வேப்பூர்:வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள பள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை-திருச்சி, கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வேப்பூர் வந்து பயணிக்கின்றனர். மேலும், அரசு அலுவலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள், சொந்த தேவைக்கு தினசரி வேப்பூருக்கு வருகின்றனர். இதனால், வேப்பூர் கூட்டுரோட்டில், 24 மணிநேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில், வேப்பூர் கூட்டுரோடு மேம்பாலத்தையொட்டி, சென்னை மார்க்க சர்வீஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே மேம்பாலத்தில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்கள், பள்ளத்தில் சிக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கார்கள், பைக்குகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !