உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ஓம் வள்ளிவிலாஸில் நவராத்திரி நிறைவு விழா

கடலுார் ஓம் வள்ளிவிலாஸில் நவராத்திரி நிறைவு விழா

கடலுார் : கடலுார் ஓம் வள்ளிவிலாஸ் நவராத்திரி நிறைவு விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., உளிட்டோர் கலந்து கொண்டனர். கடலுார் ஓம் வள்ளிவிலாஸில் அக்., 3ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. அதையொட்டி, பாரம்பரிய முறைப்படி கொலு அமைக்கப்பட்டு 9 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மலர்கள், நவதானியம், பருப்பு, இனிப்பு வகைகள் என, விதவிதமாக சிறப்பு கோலமிட்டு ஒவ்வொரு நாளும் மதியம் 12:௦௦ மணி மற்றும் மாலை 6:௦௦ மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டது.ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரசாதம் படைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.விழா குறித்து ஓம் வள்ளிவிலாஸ் மேலாளர் கூறுகையில், நவராத்திரி விழா காலத்தில் நகைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, தெய்வீக அனுபவத்தை தந்திட பாரம்பரிய முறைப்படி கொலு அமைத்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் பூஜையில் பங்கேற்றனர். நவராத்திரியின் நிறைவு நாளில் அய்யப்பன் எம்.எல்.ஏ., . நெய்வேலி ப்ளு டைமண்ட உரிமையாளர் ராஜா குடும்பத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை