உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழகப்பா நகை மாளிகையில் புதிய நகைகள் அணிவகுப்பு

அழகப்பா நகை மாளிகையில் புதிய நகைகள் அணிவகுப்பு

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் கடந்த 1966ம் ஆண்டு முதல் லாபம் மட்டுமே குறிக்கோள் இன்றி வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் தான் அழகப்பா நகை மாளிகை என உரிமையாளர் அழகப்பா மணி கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: கடந்த 59 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனை செய்கிறோம். நாங்கள் நகை வியாபாரம் செய்வதற்கு முன், நகை செய்யும் தொழிலகம் நடத்தியதால் எங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நகைகளை அனைத்து நகைகளும் 6 இலக்க எண்ணுடன் பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்கிறோம். நிறைந்த தரம், குறைந்த விலை என்பதே குறிக்கோள். பழைய நகைகள் வேறு கடை பொருளாக இருந்தாலும் அன்றைய விலைக்கு மாற்றித் தரப்படும். இந்நிறுவனத்தின் நிறுவனர் அழகப்பா நினைவு தினத்தையொட்டி கடந்த 2001ம் ஆண்டு முதல் இலவச கண் கிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் பல சமூக சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம். அழகப்பா நகை மாளிகையின் மற்றொரு கிளை எண்.29, சுப்ராய செட்டித் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலுார் என்ற முகவரியில் உள்ளது. வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது. சிறுதுளி தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு புதுப்புது டிசைன்கள் நகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்து அரசுப் பள்ளிகள், மனவளர்ச்சி குன்றிய பள்ளிகளுக்கு உபகரணங்கள், கழிவறை கட்டடங்கள், டேபிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். எனது மனைவி கவிதா மணி, சுப்ரீம் அரிமா சங்கம் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனது மகன்கள் அஸ்வின், அசோக் ஆகியோரும் நகை விற்பனை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் மெயின்ரோடு, கே.என்.,பேட்டையில் நவீன வசதிகளுடன் அழகப்பா திருமண மண்டபம் குறைந்த வாடகைக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !