உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி கோவிலில் அமாவாசை வழிபாடு

புத்தேரி கோவிலில் அமாவாசை வழிபாடு

திட்டக்குடி திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு சர்வ அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி