உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலக்கை அடைய கடின உழைப்பு தேவை என்.எல்.சி., சேர்மன் அறிவுரை

இலக்கை அடைய கடின உழைப்பு தேவை என்.எல்.சி., சேர்மன் அறிவுரை

நெய்வேலி : என்.எல்.சி., நிறுவன ஆதரவுடன் நடந்த 'தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலைய பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.என்.எல்.சி., நிறுவன திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் 37 பேர், நெய்வேலியில் உள்ள, தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும், மின் உற்பத்தி நிலைய பொறியியலில் முதுநிலை பட்டயம் மற்றும் பட்ட படிப்பை படித்து நிறைவு செய்துள்ளனர்.இவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு, தென்மண்டல 'தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன நெய்வேலி பிரிவு முதன்மை இயக்குநர் செல்வம் தலைமை தாங்கினார். என்.எல்.சி., இயக்குனர்கள் வெங்கடாசலம், சமீர்ஸ்வரூப் மற்றும் என்.எல்.சி., கண்காணிப்பு துறை முதன்மை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும், முன்னணி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பக்கான சலுகைகளையும் வழங்கி பேசுகையில்., மின் உற்பத்திதுறையில் வெற்றி பெற தேவையான திறன்கள் மற்றும் அறிவாற்றலை வழங்குவதன் மூலம், திட்டங்களுக்கு வீடும், நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்து வதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டது.பயிற்சியாளர்கள் அனைவரும், இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு விசுவாசமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களித்திடும் வகையிலும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ