உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  என்.எல்.சி., பொறியாளர் தற்கொலை கடிதம் சிக்கியதால் பரபரப்பு

 என்.எல்.சி., பொறியாளர் தற்கொலை கடிதம் சிக்கியதால் பரபரப்பு

நெய்வேலி நெய்வேலியில் என்.எல்.சி., பொறியாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம், பங்காரு பேட்டை மாவட்டம், தொப்பான அல்லி தாலுக்காவை சேர்ந்தவர் சுபா ரெட்டி மகன் வேணுகோபால்.32; இவர் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் லிக்னைட் டாப் பெஞ்சில் பொறியாளராக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 6 ல் உள்ள என்.எல்.சி., குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டின் படுக்கையறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் அவரது உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் அவரது வீட்டை சோதனை செய்ததில், வேணுகோபால் சாவதற்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் கிடைத்தது. மேலும், இறந்தவரின் தங்கை வனஜாக்சி, 28; என்பவரின் புகார் மற்றும் வேணுகோபால் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி