உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  என்.எல்.சி., ஓய்வு பெற்றோர் நலக்குழு ஆண்டு விழா

 என்.எல்.சி., ஓய்வு பெற்றோர் நலக்குழு ஆண்டு விழா

கடலுார்: கடலுார் லட்சுமி சோர்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், என்.எல்.சி.,ஓய்வுபெற்றோர் நலக்குழுவின் நான்காம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு மதுசூதனன், புகழேந்தி தலைமை தாங்கினர். அப்துல் அஜீஸ் வரவேற்றார். நிகழ்ச்சியை பாபு தொகுத்து வழங்கினார். பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா சிறப்புரையாற்றினார். ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். நலக்குழு சார்பில் லட்சுமி சோர்டியா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் ஆனந்தராஜ், சங்கர், செல்வராஜ், சதக்கத்துல்லா, குமார், குணசேகரன் உட்பட பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். சீனுவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !