மேலும் செய்திகள்
செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
03-Aug-2026
கடலுார்:கடலுார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர் பதவியை செவிலியர் அலுவலர் என மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
03-Aug-2026