புறக்காவல் நிலையம் பயணிகள் எதிர்பார்ப்பு
பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில், பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகவும், பேரூராட்சியாகவும் உள்ளது. இங்குள்ள பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி தி.அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், சவுந்திரசோழபுரம், செம்பேரி, அரியராவி மற்றும் அரியலுார் மா வட்ட கிராமங்களை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் செல்கின்றனர். இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.