உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதம் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் துவக்கம்

பாதம் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் துவக்கம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், 'பாதம் காப்போம்' திட்ட மையம் ( டயாபிட்டிக் புட் கிளினிக்) துவக்க விழா நடந்தது. தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'பாதம் காப்போம்' திட்ட மையத்தை திறந்து வைத்தார். இதில், மருத்துவர்கள் அய்யப்பன், பாலமுருகன், கோவிந்தராஜ், ராஜ்குமார், ஆனந்த், ராஜ்குமார், தினகரன், தலைமை செவிலியர் கண்காணிப்பாளர்கள் வெற்றிக்கொடி, தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து, தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், 'தேசிய சுகாதார திட்டத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில், இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீரழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியலாம். இதனால், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கை, கால்களை எடுக்கும் அவசியத்தை தடுக்க உதவுகிறது. மோனோ பிளபன்ட், விப்ரோ ஸ்கிரீன் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றியுள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இது பயன்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !