உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெல் மூட்டைகள் எரிந்து சேதம்

 நெல் மூட்டைகள் எரிந்து சேதம்

காட்டுமன்னார்கோவில்: நெல் மூட்டைகள் மற்றும் வைக்கோல் கட்டுகள், எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா,58; இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் மற்றும் வைக்கோலை வீட்டின் அருகே திறந்த வெளியில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், வைக்கோலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதையடுத்து வைக்கோல் மற்றும் நெல் மூட்டைகள் தீ பிடித்து எரிந்து சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை போராடி அணைத்தனர். இது குறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை