ஊராட்சி நிர்வாக கள ஆய்வு கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்களுக்கான மாதாந்திர கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்ட அளவில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) தனபால் முன்னிலை வகித்தார். இதில், 7 ஒன்றியங்களை சேர்ந்த மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், குடிநீர், தெருவிளக்கு பிரச்னைகளை சரிசெய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்பின், வீட்டுவரிகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் கட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.