உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 24 திருநங்கைகளுக்கு பட்டா; கலெக்டர் தகவல்

24 திருநங்கைகளுக்கு பட்டா; கலெக்டர் தகவல்

கடலுார்; கடலுாரில் திருநங்கைகள் தினத்தையொட்டி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திருநங்கை களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கேக் வெட்டி கொண்டாடினார். பின், அவர் பேசுகையில், 'திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்திட வும், அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சியை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார். கடலுார் மாவட்டத்தில் 316 திருநங்கைளுக்கு அடையாள அட்டை, 61 திருநங்கைகளுக்கு ஓய் வூதியம், 41 திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்க மானியம் மற்றும் புதியதாக 8 திருநங்கைகளுக்கு இணையதளத்தில் மானியம் வழங்க விண்ணப்பிக்கப்பட் டுள்ளது.24 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடக்கிறது. மேலும், 131 திருநங்கை களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் 210 திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.விழாவில், மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் ராஜசேகரன், பேபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ