மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Nov-2024
கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா நடந்தது.மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். சிவப்பிரகாசம், பச்சையப்பன், சிகாமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனி வரவேற்றார்.ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருேஷாத்தமன் துவக்கவுரையாற்றினார். கருவூல அலுவலர் நாகராஜன், கூடுதல் கருவூல அலுவலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பாஸ்கரன், ராமநாதன் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மனோகரன் சிறப்புரையாற்றினார்.நிர்வாகிகள் சண்முகம், ஜெயச்சந்திரன், சிவராமன், மதியழகன், மருதவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.
27-Nov-2024