உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை  

வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை  

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை-சஞ்சிவீராயன் கோவில் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவைகள் உள்ளன. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி