உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாலத்தில் மணல் குவியல் : வாகன ஓட்டிகள் அவதி

 பாலத்தில் மணல் குவியல் : வாகன ஓட்டிகள் அவதி

கடலுார்: கடலுார் அண்ணா பாலத்தில் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அண்ணா பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. டிப்பர் மற்றும் கனரக லாரி டயர்களில் ஒட்டி வரும் மண் சாலையோரங்களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அடிக்கடி அகற்றுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக மணலை அகற்றவில்லை. இதனால், மணல் குவிந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போன்று, பாரதி சாலையில் உள்ள சென்டர் மீடியன் ஓரத்திலும் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும், பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கிகூட செல்ல முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோர மணல் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ