உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தொழிலாளர்களிடம் பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு 

 தொழிலாளர்களிடம் பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு 

விருத்தாசலம்: விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் பணியாற்றும் கூலி தொழிலாளர்களிடம், பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார். விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவர் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள அகல்விளக்கு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம், தி.மு.க., அரசின் போதை கலாச்சார சீரழிவு, தே.ஜ., கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளை கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், விருத்தாசலம் நகரத்தில் உள்ள டாக்டர்கள், கல்வி நிறுவன தாளாளர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திந்து ஓட்டு சேகரித்தார். அப்போது, பா.ம.க., மற்றம் தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை