குழந்தைக்கு பெயர் சூட்டி பா.ம.க., வேட்பாளர் வாழ்த்து
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ம.க., வேட்பாளர் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். விருத்தாசலம் தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார். இவர் நேற்று கொல்லிருப்பு, நைனார்குப்பம், மேலக்குப்பம் பகுதியில், மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து பிரசாரம் செய்தார். மேலக்குப்பம் கிராமத்தில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர், தங்களின் பெண் குழந்தையை, பா.ம.க., வேட்பாளர் தமிழரசி கையில் கொடுத்து பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், அந்த குழந்தைக்கு, தேஜ ஸ்ரீ என அவர் பெயர் சூட்டி வாழ்த்தினார். அப்போது, தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிள் உடனிருந்தனர்.