உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் கவர்னருக்கு எதிராக கெட் அவுட் ரவி என போஸ்டர்

கடலுாரில் கவர்னருக்கு எதிராக கெட் அவுட் ரவி என போஸ்டர்

கடலுார்:தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, தன் உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறினார். கவர்னரின் இச்செயலை கண்டித்து, தி.மு.க.,வினர் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், கவர்னருக்கு எதிராக கடலுார் நகரில் பல இடங்களில் ஆங்கிலத்தில் 'கெட் அவுட் ரவி' என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர். அவரை காப்பாற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., கள்ளக் கூட்டணி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், 'சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன். நீங்க நேக்கா வெளிய போய்டுங்க' என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. கவர்னரை பார்த்து கூறுவது போலவும், கவர்னர் ரவி 'சூப்பர்யா நீதான்யா உண்மையான விசுவாசி' என கூறுவதாக வாசகங்கள், அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.தலைமை செயலக போட்டோவும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் படங்களும் உள்ளன. இந்த போஸ்டரை அச்சிட்டவர் பெயர், விபரம் ஏதும் இல்லை. கடலுாரில் கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAAJ
ஜன 08, 2025 17:20

திமுக தான் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது. துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது ஒரு நாளே அவர் டெல்லிக்கு ஓடோடி சென்று பிஜேபி நிர்மலா சீதாராமனை பார்த்து காலில் விழாத குறையாக காப்பாற்றுங்கள் என்னை என்று கேட்டுக் கொண்டார். அதுபோல் ஜி ஸ்கொயர் ரெய்டு சமயத்தில் ஸ்டாலின் அவர்கள் அவசரம் அவசரமாக டெல்லிக்கு ஓடிச்சென்று விமான நிலையத்திற்கு நிர்மலா சீதாராமனை வரவழைத்து காலில் விழுந்து காப்பாத்துங்க அம்மா என்று கேட்டுக் கொண்டது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். கலைஞர் விழாவிற்கு விழாவிற்கு ராஜ்நாத் சிங் எப்படி வந்தார் கலைஞர் புகழ் பாடியது எல்லோருக்கும் தெரியும் எனவே பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பது திமுக தான்.


Rajasekar Jayaraman
ஜன 08, 2025 13:56

அவர் நினைத்தால் கெட் அவுட் செய்யவே முடியும் திருட்டு திராவிடம் கத்ததான் முடியும்.


J.V. Iyer
ஜன 08, 2025 05:25

அதிருக்கட்டும், உடனே நீங்க பதவியை ராஜினாமா செய்யுங்க. பொதுமக்களின் எதிரி இந்த மாடல் அரசு.


நிக்கோல்தாம்சன்
ஜன 08, 2025 04:57

திமுகவினரின் அராஜகம் அளவுக்கு மீறி செல்வதாகவே தோன்றுகிறது , அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை மறைக்க இவ்ளோ பெரிய நாடகமா , கவர்னர் பலிக்கடாவா


சமீபத்திய செய்தி