உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த ஆயிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் அன்பரசு வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை, ஊராட்சி தலைவர் நாகராஜ் துவக்கி, வைத்தார். முகாமில் டாக்டர்கள் பிரபா, மிதிலைராஜன், சுகுனேஷ், கனிமொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில், பல் டாக்டர் செல்வகுமார், இயன்முறை டாக்டர் சுஜாஸ்ரீ, சித்தா டாக்டர் ஷோபனா, சமுதாய செவிலியர் உஷா, சுகாதார ஆய்வாளர் சரண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் செல்வதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !