தனி மாவட்டமாக மாறியதும் வளர்ச்சி :பிரேமலதா உறுதி
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், வடக்கு ஒன்றிய கிராமங்களில் ஓட்டு சேகரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை 7:00 மணிக்கு, எருமனுாரில் பிரசாரத்தை துவக்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி தலைமை தாங்கினார். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பொருளாளர் ராஜ், தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயராஜ், வி.சி.கட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், செய்தி தொடர்பாளர் சுப்புஜோதி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் மணிவேல் வரவேற்றார். தொடர்ந்து, ரெட்டிகுப்பம், கலர்குப்பம், தொட்டிகுப்பம், எம்.பட்டி, எம்.பரூர், சின்னப்பரூர், கோணாங்குப்பம், எடச்சித்துார், காட்டுப்பரூர், விஜயமாநகரம், சின்னவடவாடி கிராமங்களில் திறந்தவேனில் நின்றபடி, ஓட்டு சேகரித்தார். அப்போது, பிரேமலதா பேசுகையில், கையில், 'ஸ்டாலின் மீண்டும் முதல்வரானதும், விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். அதன்பின், விவசாயம் உட்பட பல்வேறு தொழில் வளர்ச்சிகளும் கொண்டு வரப்படும்,' என்றார். தி.மு.க., ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் சிவக்குமார், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, எம்.பட்டியில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெகப்பிரியா, இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.