உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வதேச போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கல்

சர்வதேச போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கல்

மந்தாரக்குப்பம்: சர்வதேச அளவில் நடந்த தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.சர்வதேச அளவில் செவி மாற்று திறனாளிகளுக்கான தடை தாண்டும் போட்டி மலேசியா கோலாலம்பூரில் கடந்த டிசம்பர் மாதம் 10 வது ஆசிய பசிபிக் விளையாட்டு போட்டி நடந்தது. இதில் இந்திய அணி சார்பாக பண்ருட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மாணவர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று நம் இந்திய தேசத்திற்கும், மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இந்நிலையில் மாவட்டத்தில் உடற்கல்வி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், விளையாட்டு போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா வடலுார் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் தடை தாண்டும் போட்டியில் சாதனை புரிந்த மாணவர் கார்த்திக்கு முன்னாள் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு தடகள கழக தலைவர் இராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உடற்கல்வித் துறை தலைவர் ராஜசேகர், கடலுார் மாவட்ட தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் அசோகன், என்.எல்.சி., தடகள பயிற்சியாளர் ஜேம்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !